இலங்கை அதிபருக்கெதிரான போராட்டத்தில் களமிறங்கிய இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா …!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன், மின் தட்டுப்பாடும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் உள்ள மக்கள் வீதிக்கு வந்து இலங்கை அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கண்டனம் தெரிவித்து வந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா அவர்கள், … Read more

தனது சகோதரரை விமர்சித்த இரு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த ராஜபக்சே!

இலங்கையின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் துறையாக சுற்றுலாத்துறை உள்ளது.ஆனால்,கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையில் வெகுவாக குறைந்து,கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன்காரணமாக,இலங்கை தற்போது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ் கையிருப்பு இல்லாமல்  தத்தளிக்கிறது.குறிப்பாக, அரிசி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி கட்டணத்தை அரசாங்கத்தால் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும்,அதே நேரத்தில்,மின்வெட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் … Read more