பஸ்சில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு இவர்கள்தான் பொறுப்பு – போக்குவரத்து கழகம்

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு. பேருந்து படிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

#BREAKING: பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!

பேருந்து பரிசோதனையில் செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை என எச்சரிக்கை. பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்தவும், முன் இருக்கையில் அமர்ந்து தூங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பது, உறங்குவதாக பயணிகள் புகாரை தொடர்ந்து போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளையும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் செல்போனியில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் நடத்துனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பேருந்து பரிசோதனையில் செல்போன் … Read more

போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். திருநெல்வேலியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை, போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று தொடங்கி வைத்தார்கள். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதை போல் பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் கிட்டத்தட்ட 17,000 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். மக்கள் எந்தவித பாதிப்பும், சிரமமில்லாமலும் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் … Read more