இந்தியாவில் பட்டினி, வேலையின்மை தீண்டாமை.! மத்திய அமைச்சரின் பேச்சால் எழுந்த சர்ச்சை.!

நாட்டில் பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருப்பதாக நிதின் கட்காரி கூறியதாக வெளியான கருத்துக்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கமளித்துள்ளார்.  மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு அரசு விழாவில் பேசுகையில், ‘ நாட்டில், பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருக்கிறது.’  என்று பேசியிருந்தார். அவர் மேலும்  பேசுகையில், ‘ மக்களிடம் பணவீக்கம், சாதி பாகுபாடு இருக்கிறது.   நம் நாட்டில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் அடிப்படை வசதி … Read more

இனிமேல் காரில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் – நிதின் கட்கரி

இனி கார்களில் அமர்ந்து செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்.  டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி ஞாயிற்று கிழமை(செப் 4) அன்று கார் விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மிஸ்ட்ரி மற்றும் அவரது நண்பர் இருவரும் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்ட பிறகு அரசு இனி … Read more

ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்பு அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது..

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த ஆகஸ்ட் 3 ம் தேதி ராஜ்யசபாவில் பேசுகையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை குறைக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வசூல் அமைப்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார். அடுத்த ஆறு மாதங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இறுதி முடிவுகள் இன்னும் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் “சிறந்த தொழில்நுட்பம்” விரைவில் தேர்ந்தெடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பயனர்கள் வாகனம் … Read more

ஹைட்ரஜனில் இயங்கும் காரில் பயணித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இன்று  ஹைட்ரஜன் காரில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்திற்கு வந்தார்.  ஹைட்ரஜன் கார்கள் மிக விரைவில் இந்திய சாலைகளில் வரவுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் காரில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று பயணம் செய்தார். இந்த காரில் மத்திய அமைச்சர் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். இது முற்றிலும் ஹைட்ரஜனில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்குகிறது. இந்த கார் … Read more

#BREAKING: 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற கோரிக்கை – அமைச்சர் எ.வ.வேலு..!

தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் எ.வ.வேலு பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச் சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்: தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். … Read more