டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விரைவில் டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அடையாறில் 12-வது மெகா தடுப்பூசி முகாம் நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் , 78 லட்சத்திற்கும் அதிகமானோர் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் 12-வது மெகா முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை … Read more

#BREAKING : தீபாவளிக்கு டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை…!

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரூ. 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரூ. 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 3-ஆம் தேதி 205.61 கோடிக்கும், 4-ஆம் தேதி 225.42 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மண்டலத்தில் ரூ.98.89, திருச்சி மண்டலத்தில் ரூ.89.95, சேலம் மண்டலத்தில் ரூ.87.89 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், … Read more

நவ.1 ஆம் தேதி முதல் பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நவ. 1ம் தேதி முதல் பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை  டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் மதுக்கூடங்கள்(பார்களை) திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்,அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை தற்போது டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகள் தவிர, தனித்தனி பார்களுக்கும் 01.11.2021 முதல் அனுமதி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்ட நிலையில்,அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் 01.11.2021 அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை … Read more

இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு…!

இன்று காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்படுவதால், மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, இன்று காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்படுவதால், மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கம் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது..! கூடுதல் விலைக்கு தான் மது விற்பேன் என அடம்பிடித்த ஊழியர் பணியிடைநீக்கம்..!

அரசு சொல்வதையெல்லாம் கேட்க முடியாது, கூடுதல் விலைக்கு தான் மது விற்பேன் என அடம்பிடித்த மதுக்கடை ஊழியர்கள் பணியிடைநீக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பானத்தை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. விற்பனை செய்யப்படும் மதுவுக்கு ரசீது வழங்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மதுபான கடைகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் எல்லைக்குட்பட்ட திருவரங்கம் டாஸ்மாக் மதுபான … Read more

#BREAKING: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு- தமிழக அரசு..!

சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தபடி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிப்பு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் டாஸ்மாக்கில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம், 25,009 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500  கூடுதலாக 2021 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலவாகும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் … Read more

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது – டாஸ்மாக் நிர்வாகம்

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது  டாஸ்மாக் நிர்வாகம்  தெரிவித்துள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது என்றும், வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி விலைப்பட்டியல் இருக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்கள் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் போது மொத்தமாக விற்பனை … Read more

தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்..!

தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை காசிமாயன் டாஸ்மாக் விற்பனை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாகவும். 2010-11ல் ரூ.3.56 கோடி , 2011-12ல் ரூ.1.12 கோடி, 2012-13ல் ரூ.103.64, 2013-14ல் ரூ.64.44 கோடி, 2019-20ல் ரூ.64.44 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், … Read more

#BREAKING: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

டாஸ்மாக் மதுபான ஊழியர்களுக்கு தலா ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவிப்பு. இன்று தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதன்படி, 2021 ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு … Read more

திண்டுக்கல் டாஸ்மாக் கடையில் 6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு…. காவல்துறை விசாரணை…

கொரோனா தொற்றை தடுக்க இந்தியா முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன்எனப்படும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில்  இந்த ஊரடங்கு  மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரிய தலைவலியை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தற்போது திண்டுக்கல்லில் உள்ள  அரசு மதுபானக் கடையின் பின்பக்கக் கதவை உடைத்து மர்மநபர்கள் தங்கள்  கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் … Read more