காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றை விநியோகிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆகஸ்ட் இறுதிக்குள் விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் விநியோகிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவ, மாணவியருக்கு இடையேயான பேதத்தை ஒழிக்க கேரள பள்ளியில் புது முயற்சி …..!

மாணவ, மாணவியருக்கு இடையேயான பேதத்தை ஒழிக்க கேரள பள்ளியில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் மாணவ மாணவியருக்கு இடையேயான பாலின பேதத்தை கலைக்கும் விதமாக புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இந்த பள்ளியில் படிக்க கூடிய மாணவ, மாணவியர்கள் இருவருக்குமே மேல் சட்டையும், முக்கால் பேண்டும் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு சுடிதார் மற்றும் ஸ்கர்ட்டுக்கு பதிலாக பேண்ட் … Read more