அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

rain

தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணாமாக தமிழகத்தில் இன்று (31.12.2023) திருநெல்வேலி மற்றும் … Read more

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

tn rain

இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணாமாக தமிழகத்தில் இன்று (30.12.2023) மற்றும் நாளை (31.12.2023) ஆகிய நாட்களில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று திருநெல்வேலியின் பல பகுதிகளில் 20 … Read more

முதற்கட்ட நிவாரண பணிகள்.. அரசியல் செய்ய வேண்டாம்.! அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்.!  

Minister Udhayanidhi stalin - Tirunelveli flood relief

தென் மாவட்டத்தில் பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தால், உயிர்சேதம், பொருட்சேதம், கால்நடை உயிர்சேதம் என பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பின்னர் வெள்ள நிவாரண உதவி தொகை விவரங்களை அறிவித்தார். ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா 6000 ரூபாய், … Read more

தமிழக வெள்ள பாதிப்பு.! பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை.! 

Tamilnadu Flood 2023 - PM Office

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கனமழை, பெரு வெள்ளத்தை தமிழக மக்கள் எதிர்கொண்டு உள்ளனர். வட தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டம் மக்கள் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதேபோல, தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அந்த ஆற்றின் கரையோர பகுதி மக்கள் வெள்ள பாதிப்பால் மிகுந்த பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். … Read more

கனமழை வெள்ளத்தால் சான்றிதழ் சேதமா.? மாணவர்கள் இலவசமாக பெறலாம்.! 

SouthTNRains - Educational Certificates

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக  தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் பெருமளவு பாதித்துள்ளன. வெள்ளத்தால் தென்மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.  இதனால் பல்வேறு மாணவர்களின் முக்கிய சான்றிதழ்கள் நீரில் மூழ்கின. தமிழகத்தில் 28-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்! இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்ட்டனர். ஏனென்றால், அந்த ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களின் நகலை பெறுவதற்கு சாதாரண நாட்களில் மிகுந்த சிரமமாக … Read more

தூத்துக்குடி கனமழை : பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் துவக்கம்.!

SouthTNRains - Thoothukudi Floods

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் . குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கரையோர வழித்தடத்தில் இருந்த பகுதிகள் பெருபாலும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இன்னும் பல்வேறு இடங்களில் வெள்ள பதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வர தவித்து வருகின்றன. சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தூத்துக்குடி மற்றும் … Read more

4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.!

Rajinikanth Rasigar Mandram - SouthTNRains Relief fund

தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளும்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.  திருநெல்வவேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. தூத்துக்குடி வெள்ளம் : 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. யார் யார் எந்தெந்த பகுதிக்கு.? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு பலரும் தங்கள் உதவிகளை, நிவாரண பொருட்களை அனுப்பி … Read more

தூத்துக்குடி வெள்ளம் : 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. யார் யார் எந்தெந்த பகுதிக்கு.?

Thoothukudi Rains - SouthTNRains

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் பல்வேறு இடங்களில் நீடித்து கொண்டு இருக்கிறது. உதவிக்காகவும், மீப்பு பணிகளுக்காகவும், உணவுக்காவும் இன்னும் மக்கள் தவித்து வரும் சூழல் நிலவுகிறது. அவர்களை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். வெள்ளத்தால் தனி தீவில் சிக்கியவர்களை போல் தவித்து வரும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மீட்ப பணிகளை நேற்று முதல்வர் … Read more

ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம்.!

RAIN

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு … Read more

கனமழை பாதிப்பு.! ரேஷன் கார்டுக்கு ரூ.6000 நிவாரணம்.! முதல்வர் அறிவிப்பு.!

Tamilnadu CM MK Stalin announce South TN Rains

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மழைநீரால் சூழ்ந்தன. அங்குள்ள மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. தற்போதும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் முழுவதும் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் வருகை : இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடியில் … Read more