நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஈஷா மகாசிவராத்திரி வீடியோ!

Mahashivaratri video on New York Times

Maha Shivratri: நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஈஷா மஹாசிவராத்திரி வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த நியூயார்க் நகரவாசிகள் “ஹர ஹர மகாதேவ்” என்ற பாடலுக்கு ஆடி மகிழ்ந்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, “சத்குருவுடன் மஹாசிவராத்திரியின் மகிழ்வான காணொளி – உலகில் அதிகம் பார்க்கப்பட்ட மஹாசிவராத்திரி நிகழ்வு” என்ற செய்தி நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் திரைகளை ஒளிரச் செய்தது. இது குறித்த வீடியோவை சத்குரு அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். #TimesSquare, New York … Read more

Shivratri 2024: ஈஷா மஹாசிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்.!

Shivratri 2024

குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் பங்கேற்பு Shivratri 2024: உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் … Read more

Maha Shivratri 2024: மார்ச் 8-ல் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழா.!

Maha Shivratri 2024

மார்ச் 8-ல் ஈஷாவில் கோலாகலம் Maha Shivratri: உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. … Read more

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை.!

Maha Shivratri

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற முடியும். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 8-ம் தேதி மிக கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, இவ்விழாவில் பங்கேற்க … Read more

நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம் – தமிழக விவசாய சங்க தலைவர் பாராட்டு

நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என காவேரி கூக்குரல் இயக்க விழாவில் தமிழக விவசாய சங்க தலைவர் பாராட்டு. காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். … Read more

ஈஷா சார்பில் தமிழக சுகாதார துறைக்கு 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று (ஜூலை 21) வழங்கப்பட்டது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முக கவசங்களை ஈஷா தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் அவர் அவற்றை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் பிரித்து வழங்கினார். இது தொடர்பாக அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “4 லட்சம் … Read more

#கேலோ இந்தியா போட்டி:களரியில் 2 பதக்கங்கள் வென்ற சமஸ்கிரிதி மாணவர்கள்!

தேசிய அளவில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 2 வெண்கல பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளனர். இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும்,திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை கண்டறியவும் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, 2021-ம் ஆண்டிற்கான போட்டிகள் ஹரியானாவில் உள்ள பஞ்சகுலாவில் இம்மாதம் நடத்தப்பட்டன.25 வகையான விளையாட்டு போட்டிகளில் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிப் போட்டியும் நடத்தப்பட்டது.இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 180 இளம் வீரர்கள் பங்கேற்றனர். … Read more

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 23-வது ஆண்டு தினம்..!

தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது. கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 23-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்துவ, சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன. தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர … Read more

சமவெளியில் மிளகு சாதியம் என்பதை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும் ஈஷா…!

சமவெளியில் மிளகு சாதியம் என்பதை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும் ஈஷா. இன்று 19-06.22 புதுக்கோட்டை ஆலங்குடியில் உள்ள வடகாடு கிராமத்தில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற கருத்தரங்கு மற்றும் களப் பயிற்சி ஈஷாவின் காவேரி குரல் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்குபெற்றனர். மிளகு சாகுபடி மலை பகுதியில் மட்டுமல்லாது சமவெளியிலும் சாத்தியம் என்பதை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்காவை சேர்ந்த பல விவசாயிகள் நிரூபித்துள்ளனர். முக்கியமாக பல வருடங்களாக … Read more

‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!

‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தானை கமாண்டிங் ஆஃபிசர் அசோக் ராய் தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் (ஜூன் 5) நடைபெற்றது.ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டிங் ஆஃபிசர் காமோடர் அசோக் ராய் அவர்கள் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு … Read more