தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் புத்தாண்டில் உறுதி எடுங்கள் – சத்குரு

நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும் ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.  “நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும்” என்று ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் சத்குரு கூறியுள்ளதாவது: தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் தேசம் சுதந்திரம் … Read more

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய ஈஷா!

ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. பட்ட படிப்பு: தாணிக்கண்டி,முள்ளாங்காடு,பட்டியார் கோவில்பதி,மடக்காடு, மத்வராயபுரம்,ஆலாந்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 23 மாணவிகள் மற்றும் 4 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த இம்மாணவர்கள் ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் … Read more

மண் வளத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.நா சபையில் ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்..!

மண் வளத்தை பாதுகாக்க சர்வதேச அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஐ.நா சுற்றுச்சூழல் சபையின் மாநாட்டில் ஈஷா அவுட்ரீச் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. யூரி ஜெயின் வலியுறுத்தினார். ஐ.நா சுற்றுச்சூழல் சபையில் (UNEA) ‘பூமி மீதான நம்பிக்கை’ என்ற தலைப்பில் சர்வதேச கலந்துரையாடல் நிகழ்வுகள் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் உரை நிகழ்த்த ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற ஈஷா அவுட்ரீச் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி, அதன் … Read more

இன்று மாலை 6 மணி முதல் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்!

கோவை:ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்று கொள்ளலாம். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 1-ம் தேதி) ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே, ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் … Read more

ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்..!

கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்திற்கு … Read more

நோபல் பரிசு பெற்ற ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுகுறித்து களப் பணி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் ஈஷா அவுட்ரீச் அமைப்புடன் ஐ.நாவின் உலக உணவு அமைப்பு (UN World Food Programme- WFP) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு 2020-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பெருமைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறுகையில், “ஐ.நா. அமைப்புகளும், உலகில் உள்ள ஒவ்வொரு பொறுப்பான விஞ்ஞானிகளும் இப்போது … Read more

ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகள்!

ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகளில் ஜனவரி 2, 3 தேதிகளில் நேரில் பங்கேற்கலாம். ஆரோக்கியமான, ஆனந்தமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளது. ஈஷா யோகா மையத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் இவ்வகுப்பை … Read more