ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே

தமிழகத்தில்  27 மாவட்டங்களில்  உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புக்லுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மொத்தம் 91 ஆயிரத்து975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தா உள்ளாட்சி தேர்தல் வருது,அதோ வருகிறது  என்று மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக  தேர்தல் நடைபெற உள்ளது.வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார் அதில் … Read more

5 மாநில ஆளுநர் நியமனம்..!யார் யார்…?எந்தெந்த மாநிலம் லிஸ்ட் இதோ

5 மாநிலங்களில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யார் யார் எந்த மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ராஜஸ்தான்,மகாரஷ்ட்ரா,இமச்சல்,கேரளா,தெலுங்கான,ஆகிய மாநிலங்களில் தான் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இமச்சல் பிரதேச மாநில ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா தான் ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இமச்சல் பிரதேச மாநில ஆளுநராக பண்டாரு தத்தாரேயா நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலத்தின் ஆளுநராக  ஆரிப் முகம்மது கான் … Read more

இந்து எவ்வளவு முக்கியமோ அது போல் இந்தியனும்..! மதம் மீது மதம் திணிப்பு மிகப்பெரிய வன்முறை – வசைபாடும் வைரமுத்து

மதம் மீது மதம் திணிக்கப்படுவதும் தான் மிகப்பெரிய வன்முறை என்று  கவிஞர் வைரமுத்து விளாசியுள்ளார். சென்னையில் மதநல்லிணக்க மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து  மத நல்லிணக்கம்தான் இந்த மண்ணின் இயல்பு,  மதம் மீது மதம் திணிக்கப்படுவதும் தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய வன்முறை  என்று விளாசினார்.மேலும் அவர் பேசுகையில் இந்துக்கள் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு இந்தியர்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியம் என்று தெரிவித்தார்.

நீங்க முன்னால போன நாங்க பின்னால வாரோம்-அமெரிக்கா விரையும் அமைச்சர்கள்..!

தமிழக முதல்வர் பழனிச்சாமி  அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு வருகிறார் பயணத்தின் போது  பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.இந்நிலையில் தமிழக அமைச்சா்கள் ஆர்.பி.உதயகுமார்  மற்றும் ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் நாளை அமெரிக்காவிற்கு  பயணம் மேற்கொள்கின்றனர் . இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில் அமைச்சா் ஆர்.பி.உதயகுமார்  மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர்  நாளை அமெரிக்காவில் முதலமைச்சரோடு நாங்கள் இணைகிறோம். மேலும் அவர் பேசுகையில் அமெரிக்காவில் … Read more

கருப்புப்பணம் பதுக்கிய கருப்பு ஆடுகள் யார்..?நாளை வெளியிடும் சுவிஸ் கலக்கத்தில் ஆடுகள்..!

கருப்பு பணம் நாட்டின் பெரும் தலை வலியாக உள்ளது.கருப்பு பணம் தொடர்பாக சுவிஸ் வங்கி  தகவல் அளிக்க தயாராக உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை நாளை சுவிஸ் வங்கி  ஒப்படைக்கிறது என்று தெரிவித்துள்ளது. நாளை சுவிஸ் வெளியிடும் இந்தியர்களின் தகவல்களை எதிர்நோக்கி நாடு உள்ளது.இந்த தகவலை மத்திய மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிகாரப் பூர்வமாக … Read more

புதுச்சேரி புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்..!

மறைந்த திமுக கட்சியின் தலைவர் மு கருணாநிதி அவர்களின் பெயர் புதுச்சேரி மாநில காரைக்கால் – புறவழிச்சாலைக்கு சூட்ட அம்மாநில ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார் .மேலும் புதுச்சேரியில் உள்ள  இந்திராகாந்தி சிலை முதல் ராஜிவ்காந்தி சிலை வரை உள்ள சாலைக்கும் கருணாநிதியின் பெயர் சூட்ட அனுமதி அளித்து உள்ளார் இதனால் இனி இந்த சாலைகள் கருணாநிதி பெயர் … Read more

இருளில் பிரதமர் அலுவலகம் : கரண்ட் பில் கட்ட காசு இல்லையா..?அப்ப கரண்ட்_டும் இல்ல..!கனைக்சனை கட் செய்த வாரியம்..!

பாகிஸ்தான் பிரதமராக தற்போது பதவி வகித்து வருபவர் இம்ரான் கான்.இந்நிலையில்  அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது.அது என்னவென்றால் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது. எதற்கு இப்படி ஒரு நாட்டு பிரதமரின் அலுவலம் இருளில் மூழ்கியுள்ளது என்று பார்த்தால்  பிரதமர் அலுவலகத்தின் கடந்த மாதத்திற்கான  மின் கட்டணம்  41 லட்சம் அதனோடு  இந்த மாதத்திற்கான  மின் கட்டணம் 35 லட்சம் இதனை  அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மின்சார வாரியத்திற்கு  செலுத்தவில்லை என … Read more

மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம்

மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று  ஆலோசனை நடைபெறுகிறது. அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று  காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தின் முடிவில் மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – திட்ட அறிக்கையை உங்க அரசு இன்னும் சமர்பிக்கல..!அம்பலமான தகவல்

மதுரை மாவட்டம் கே .புதுப்பட்டியில் 1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது அதன் படி  பிரதமர் மோடி மதுரை வந்து அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில்மதுரை-கே .புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான தமிழக அரசு சமர்பித்துள்ள திட்ட அறிக்கை குறித்து மதுரையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு மனு ஒன்றை அளித்து இருந்தார். இந்த மனு குறித்து விபரம் அளித்துள்ளது … Read more

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா..?

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அல்பேஷ் தாக்கூர் திடீர் ராஜினாமா செய்துள்ளார். குஜராத் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் அல்பேஷ் தாக்கூர் இவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்  என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.