#T20Iseries: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.

2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. டி20 உலகக் கோப்பை தொடர் அக்.16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதற்கு  முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் விளையாட உள்ளது. உலக கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்களுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெறவுள்ளது, இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 தொடர் செப்.28ல் திருவனந்தபுரத்தில் நடைபெறும். 2வது மற்றும் 3வது டி20 போட்டிகள் அக்டோபர் 2 மற்றும் 4ம் தேதி கவுகாத்தி மற்றும் இந்தூரில் நடைபெறுகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் செப்.20 அன்று தொடங்க உள்ளது. 2வது மற்றும் 3வது டி20 செப்.23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பு: ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்தத் தொடரின் போது உடற்தகுதி தொடர்பான வேலைகளுக்காக NCA க்கு அறிக்கை செய்வார்கள்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காத்திருப்பு வீரர்கள் – முகமது. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment