ஸ்டெர்லைட் தீர்ப்பு….திமுக வெளிநடப்பு… முக.ஸ்டாலின் பேட்டி…!!

சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.இதில் கவர்னர் உரைக்கு பதிலுரை உள்ளிட்ட தீர்மானகள் வாசிக்கப்பட்ட்து.இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உத்தரவை அடுத்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் , தமிழக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேம்.தமிழக சட்டத்துறை அமைச்சர் C.V   சண்முகம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சர்வதேச அளவில் எந்த நீதி மன்றம் சென்றாலும் திறக்க முடியாது என்று தெரிவித்தார். ஆனால் இன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றாவது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைச்சரவை கூட்டி முடிவெடுப்பார்களா என்று நினைத்தால் சட்டப்பேரவையில் எதுவுமே பேசவில்லை எனவே திமுக சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம்…

author avatar
Dinasuvadu desk

Leave a Comment