உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாற்றிமாற்றி பேசுகிறார் ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார்

  • முதலமைச்சராக விரும்புபவர்கள் நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி முதல்வராக அறிவித்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை சட்டம் எந்த விதத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை. இதுகுறித்து அதிமுக கூறியுள்ளது. எனவே எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்த்து, ஆதரிக்க வேண்டிய விஷயங்களை அதிமுக ஆதரித்து வருகிறது.

அதனடிப்படையில் இதனால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை .எனவே எதையும் ஆராயாமல் அதிமுக முடிவு எடுக்காது என்றார். ஒரு குழப்பமான கட்சி திமுக, நீதிமன்றம் சென்று தேர்தலை நிறுத்த முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதனை ஏற்பதாக கூறிய ஸ்டாலின்,தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலை வரவேற்ப்பதாகவும், அதே நேரத்தில் நீதிமன்றம் சென்று மக்களை ஏமாற்றும் வேலையை ஸ்டாலின் செய்து வருகிறார். மேலும் முதல்வர் கனவோடு தான் ஸ்டாலின் உள்ளார்.எனவே அவர் நித்தியானந்தா போன்று ஒரு தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் முதல்வராக ஸ்டாலின் ஆகலாம். தமிழகத்தில் ஒரு போதும் அவரால் முதல்வராக முடியாது  என்று தெரிவித்துள்ளார்.