கனடாவில் சிக்கிய தளபதி விஐயின் மகன்!

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால், அனைத்து சினிமா படங்களின் வெளியீடும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக சினிமா பிராபாலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் வீட்டில் தனித்திருக்கின்றனர். இதனையடுத்து,  தளபதி விஜயின் மகன் படிப்பதற்காக கனடா சென்றுள்ளார். இந்த கொரோனா வைரஸ் தாக்காதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், சஞ்சய் வீடு திரும்ப இயலாமல், கனடாவில் சிக்கியுள்ளார்.
தனது குடும்பத்துடன் வீட்டில் இருக்கும் தளபதி விஜய்க்கு, அவரது மகன் சஞ்சய் தனியாக கனடாவில் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.