சசிகலாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு…!மார்க்கண்டேயன் விரக்தியில் பேசுகிறார் …!அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் விரக்தியில் பேசுகிறார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்

Image result for அமைச்சர் கடம்பூர் ராஜூ சசிகலா

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அ.தி.மு.க.வின் 47வது ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ., மார்கண்டேயன்,  சின்னம்மாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு. அ.தி.மு.க.,வில் இருந்து டிடிவி அணிக்கு எம்.எல்.ஏ.,க்களை அனுப்பிவைப்பதும் அமைச்சர் கடம்பூர் ராஜு தான்  என்று பரபரப்பாக கூறினார்.

Image result for  சசிகலா

இந்நிலையில் இவரது கருத்துக்கு  அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் விரக்தியில் பேசுகிறார். நாங்கள் பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக 90% வளர்ச்சி அடைந்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதே எங்கள் லட்சியம், தனி நபர் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்

Leave a Comment