சீமான் சர்ச்சை பேச்சு ! அறிக்கை கேட்ட தேர்தல் ஆணையம்

சீமான் சர்ச்சை பேச்சு குறித்து தமிழக தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ராஜீவ் காந்தியைக்  நாங்கதான் கொன்றோம் என்பது சரிதான் .ஒரு காலம் வரும் என்று பேசினார். ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வன்முறையைத் தூண்டுதல்(153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.