கேட்டது ரூ 39,565,00,00,000……கொடுத்தது ரூ 1,748,0000000….தமிழகத்தை வஞ்சித்த BJP அரசு….!!

7
தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டு வறட்சி நிவாரண நிதியில் வெறும் 4 சதவீதம் மட்டுமே வழங்கியிருப்பது புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
மாநில அரசாங்கங்கள் மத்திய அரசிடம் தங்கள் மாநில வறட்சிக்கான நிதியை கோரி பெற்றுக்கொள்ளலாம்.அந்த வகையில் தமிழக அரசு மத்திய அரசிடம்  2015-2016 முதல் 2017ஆம் ஆண்டு வரை வறட்சி கால நிவாரண நிதியாக 39, 565 கோடி ரூபாயை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்த நிலையில் மத்திய அரசு வழங்கியது வெறும் 1748 கோடி ரூபாய் மட்டுமேஎன்று விவசாய அமைச்சக புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
இந்த புள்ளி விவரத்தில் வேறு எந்த  மாநிலங்களையும் சதவீத அளவில் ஓப்பிட்டால் தமிழகத்திற்கு மிகக் குறைவான நிதி வழங்கி பிற மாநிலங்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல 2015-2016_ஆம் ஆண்டு முதல் 2017-2018_ஆம் ஆண்டு வரை மத்திய அரசிடம் மாநிலங்கள் கேட்ட நிதி 1,23,605 கோடி மத்திய அரசு வழங்கிய நிதி 23,190 கோடி எனபது புள்ளி விவரங்களில் தெரிய வந்திருக்கிறது