மீண்டும் கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம் – அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம்

அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரசை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர்  மாதம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையின் போது, தன்னார்வலர்  ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்ட நிலையில், அமெரிக்காவில், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்குவதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அளித்துள்ள ஒப்புதலையடுத்து, அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்குவதாக தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.