காதலனை கரம்பிடிக்கும் யாரடி நீ மோகினி சீரியல் வில்லி – புகைப்படம் உள்ளே!

காதலனை கரம்பிடிக்கும் யாரடி நீ மோகினி சீரியல் வில்லி – புகைப்படம் உள்ளே!

Default Image

யாரடி நீ மோகினி தொடரின் வில்லி ஸ்வீதா அதாவது, சைத்ரா தனது காதலனுடன் நிச்சயம் செய்துகொண்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர்தான் யாரடி நீ மோகினி. இந்த தொடரில் கதாநாயகியை விட வில்லிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சீரியல்கள் என்றால் கதாநாயகி அப்பாவியாக இருந்தால் அவரை தான் பலருக்கு பிடிக்கும். இந்த சீரியலில் கதாநாயகிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு வில்லிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் அவரது அழகும் தனது நிஜ வாழ்க்கை முறையில் குழந்தைத்தனமான புத்தியும் தான் அதற்கு காரணம். ஆம் யாரடி நீ மோகினி தொடர் சைத்ரா ரெட்டி அவர்களை பற்றி தான் பார்க்கிறோம்.

இவர் ராகேஷ் குமார் என்பவரை காதலித்து வந்தது கடந்த சில நாட்களுக்கு முன்பதாகவே அனைவருக்கும் தெரியும்.அவரும் சினிமா துறையில் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்பொழுது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதற்கான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சைத்ரா. அவரது காதலரும் பதிவிட்டுள்ளார். இவரது நிச்சயதார்தத்துக்கு அவரது திரையுலக நண்பர்கள் ரேஷ்மா, ஷபானா, வெண்ணிலா ஆகியோரும் வந்துள்ளனர். சித்ராவுக்கு பல்வேறு ஜீ தமிழ் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube