தமிழக அரசியலில் நாளை அதிசயம் நடக்கும் : ரஜினியின் அனல் பறந்த அரசியல் அதிரடி கருத்து!

கமல்ஹாசன் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகாலம் ஆனதை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. அதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என திரை ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் சார்ந்து தனது பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்தார். அதில், ‘ கமல்ஹாசன் எனது கலையுலக அண்ணா. நான் நடத்துனராக இருந்து நடிகனாக கஷ்டத்தை விட கமல் அதிகம் கஷ்டப்பட்டார். திரையுலகில், உதவி இயக்குனர், நடன இயக்குனர் என பல்வேறு கஷ்டங்களை தண்டி கதாநாயகனானார். திரை உலகில், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, நடனம், தயாரிப்பு இயக்கம், நடிப்பு என அனைத்தையும் செய்து  60 ஆண்டுகாலம் நிலைத்து நின்றவர் கமல்ஹாசன் மட்டுமே.’ என தெரிவித்து,
பின்னர் அரசியல், கருத்துக்களை பதிவிட்டார். அப்போது, ‘ 2 வருடத்திற்கு முன்னர், தான் முதல்வராக இருப்போம் என எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்க மாட்டார். ஆனால், அது நடந்தது. தமிழ்க அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது. இன்று நடக்கிறது. அது போல நாளையும் அதிசயம் நடக்கும். ‘ என அதிரடியாக கருத்துக்களை தெரிவித்தார்.
இவரது அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.