” ரபேல் போர் விமான ஒப்பந்தம் ” பிஜேபி அரசில் விலை மலிவு….அறிக்கையை தாக்கல் செய்த பொன் ராதாகிருஷ்ணன்…!!

ரபேல் போர் விமான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர் .சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக  எதிர்க்கட்சிகள் கூறிய குற்றசாட்டை மத்திய பிஜேபி அரசு நிராகரித்தது.
இந்நிலையில் , நேற்று நடைபெற்ற மக்களவையில் ரபேல் குறித்த சிஏஜி  அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  தாக்கல் செய்தார்.இதில் 2007ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் போடப்பட்ட ஒப்பந்தத்தை காட்டிலும் 2016ஆம் ஆண்டு மோடி அரசு கையெழுத்திட்ட ரபேல் ஒப்பந்தத்தால் 2.86 சதவீதம் விலை மலிவு என குறிப்பிடப்பட்டு இருந்தது அத்துடன் குறிப்பிட்ட சிறப்பு மேம்பாடுகள் 17.8% 17 . 8% படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது விமானங்களின் ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே கிடைக்கும்படி இருந்தது என கூறப்பட்டுள்ளது .