தீவிரவாதிகளுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்த இந்தியா…..பிரதமர் மோடி விளக்கம்…!!

  • பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியது.
  • இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரிடம் விளக்கினார்.

கடந்த 14ஆம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைநிலை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து இந்தியாய் நாடே கடும் கோபத்தில் இருந்தது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு துணை போகும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக  எச்சரிக்கை விடுத்து வந்தது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை மட்டமாக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரிடம் விளக்கினார். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கமாக  தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment