“தாதா 87” திரைப்படத்தின்  சினேக் பீக் வெளியானது!!!!

  •  நடிகர் சாருஹாசன்”தபராணா கத்தே” என்ற கன்னடப் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
  • தற்போது சாருஹாசன் “தாதா 87” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நடிகர் சாருஹாசன் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை இயக்குனர் மகேந்திரன் தனது “உதிரிப்பூக்கள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகப் படுத்தினார். அதன் பிறகு “நெஞ்சத்தை கிள்ளாதே”  ,” நிழல்கள்” , “மூன்று முகம்” ,  “தளபதி” , “வீரா” உள்பட பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவர் “தபராணா கத்தே” என்ற கன்னடப் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது சாருஹாசன் “தாதா 87” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார். மேலும், ஜனகராஜ், ஆனந்த் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்குகிறார். இந்த படத்தின் டிரைலர்    ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படத்தின் சினேக் பீக் வெளியானது.

author avatar
murugan

Leave a Comment