குஜராத்தில் ஜனநாயக திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.! பிரதமர் மோடி பேட்டி.!

குஜராத் மக்களால் இன்று ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. – குஜராத் தேர்தலில் வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி பேட்டி. 

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது.  இதனைத்தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் அகமதாபாத்தில் சபர்மதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ குஜராத் மக்களால் இன்று ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்று வாக்களித்து ஜனநாயக கடமையாற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது நன்றி.  தேர்தலை அமைதியாக நடத்தி வரும் தேர்தல் ஆணையத்தை நான் பாராட்டுகிறேன்.’ என பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment