பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருதை வழங்கினார் மாலத்தீவு அதிபர் இப்ராகிம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டது.
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்த திட்டங்கள் வெளியிடப்பட்டது.
இன்று  பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அங்கு நடைபெற்ற  பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.இதன் பின்னர் மாலத்தீவிற்கு விமானம் மூலம் கிளம்பினார். மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் ஆகும்.பின் மாலத்தீவிற்கு சென்ற அவரை அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் வரவேற்றார்.

அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டது.மாலத்தீவு அதிபர் இப்ராகிம் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிஸான் இசுதீன் விருதை வழங்கினார்.