மீண்டும் உடல் எடை அதிகரித்து குண்டான தோற்றத்தில் வலம் வரும் பாகுபலி பட நடிகை!

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ரெண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம் மற்றும் கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பாகமதி. இப்படத்திற்கு பின் இவர் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்ததால், இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் கடும் உடற்பயிற்சிக்கு பின் தனது உடல் எடையை குறைத்தார். அதன்பின்பு இவருக்கு நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து, இந்த படத்தில் நடித்ததற்கு பின், இவர் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், அவர் உடல் எடை அதிகரித்து குண்டாக இருக்கிறார். இவர் உடற்பயிற்சியால் உடல் எடையை குறைக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.