பிஆர்பி நிறுவன சொத்துகள் கணக்கெடுப்பு.. 13 பேர் கொண்ட குழு அமைப்பு

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள பிஆர்பி நிறுவன சொத்துகளை கணக்கிட 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேட்டில் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் இரவு பகல் பாராது சம்மந்தப்பட்ட நபர்களிடம் முறையான விசாரணை நடத்தி தனது அறிக்கையை, 2015, நவ.23ல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் ரூ.1 லட்சத்து … Read more

அமெரிக்காவில் தங்கம் வென்ற இந்திய மாணவர்கள்..,

அமெரிக்காவில் நடந்த ரோபாட்டிக்ஸ் போட்டியில் மும்பையை சேர்ந்த மாணவர்கள், தங்கப்பதக்கத்துடன் கூடிய ஜாங் ஹெங் என்ஜினீயரிங் டிசைன் விருதினை வென்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ரோபோ என்னும் எந்திர மனிதர்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படுகிற முதலாவது உலகளாவிய ரோபாட்டிக்ஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 157 நாடுகள் கலந்துகொண்டன.இப்போட்டியில் மும்பையை சேர்ந்த மாணவர்கள், தங்கப்பதக்கத்துடன் கூடிய ஜாங் ஹெங் என்ஜினீயரிங் டிசைன் விருதினை வென்று சாதனை படைத்துள்ளனர். உலகளாவிய சவால் மேட்ச் … Read more

கடந்த 4 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம்

இந்திய விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடகோரியும் ,விவசாய பொருள்களுக்கு நியமான விலை வழங்கிடகோரியும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வரை 41 நாட்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக கைவிட்டு விட்டு தமிழகம் திரும்பினர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் பல்வேறு நூதன முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று தமிழக விவசாயிகள், கொட்டும் மழையில், தங்கள் முன் … Read more

342 ராணுவ வீரர்கள் பணி நீக்கம்..!!

துருக்கி, ஜூலை 16 துருக்கியில் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் உள்பட 7,563 பேரைப் பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.இது தொடர்பாக அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்திருப்பது: தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், 7,563 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள். அதில் 342 பேர் ராணுவ வீரர்கள். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 2,303 பேர் பணி நீக்கம் செய்யப்பட் டுள்ளனர். மீதியுள்ள நபர்கள் ஆசிரியர் உள்ளிட்ட அரசு ஊழி யர்களாவர். … Read more

கொல்கத்தா: பள்ளி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…!

கொல்கத்தா: கொல்கத்தாவில் அபினவ் பாரதி மேல்நிலை பள்ளிக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பலர் தீ காயம் அடைந்துள்ளனர்.

சீனாவிடமிருந்து பாதுகாத்து கொள்ள தேவையான திறமை இந்தியாவிடம் உள்ளது:வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

புதுடில்லி: சீனாவிடமிருந்து பாதுகாத்து கொள்ள தேவையான திறமை இந்தியாவிடம் உள்ளது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.கடந்த ஒரு மாத காலமாக இந்திய -சீனா இடையே போர் பதற்றம் நிலைவி வருகிறது. அண்மையில் தான்  சிக்கிம் மாநில எல்லையில் நிலவும் இந்தியா – சீனா இடையே நிலவி வரும் பதற்றம் தொடர்பாக ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: டோக்லாம் பகுதியில் தற்போதைய நிலையை மாற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. இந்தியா தன்னை … Read more

மீடியா மூலம் மிரட்டும் சீனா!!

டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை பின்வாங்க செய்ய சீனா உளவியல் ரீதியிலான தொல்லைகள் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டோக்லாம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்ததை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் சீனா எல்லையில் தனது ராணுவத்தை குவித்தது. அதோடு சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வர முயற்சித்தனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர். சீனா, இந்தியா தனது படைகளை எல்லை … Read more

மத்திய அரசின் மாடு விற்பனை சட்டத்திற்கு எதிரான தடை ஒரு வாரம் நீட்டிப்பு : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : மத்திய அரசின் மாடு விற்பனை சட்டத்திற்கு எதிரான தடை மேலும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆசிக் ஆகியோர் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ராஜினாமா ஏற்கப்பட்டது. மாநிலங்களவை சபாநாயகர் ஹமீது அன்சாரி மாயாவதியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். தலித் பிரச்சனை தொடர்பாக தன்னை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை என்று கூறி தனது எம்பி பதவியை மாயாவதியி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலை

புது டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் உள்ளார். 60,683 வாக்குகளுடன் ராம்நாத் முன்னிலை வகித்து வருகிறார். எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார் 22,941 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.