தோல்வியின் விழும்பில் இலங்கை…!

கொழும்பு: ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியில், 388 ரன் வெற்றி இலக்கை துரத்தும் இலங்கை அணி 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்துள்ளது. கொழும்பு, பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 356 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் அதிகபட்சமாக 160 ரன் விளாசினார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 346 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 10 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை … Read more

தாமிரபரணியை தூய்மை படுத்தும் பணியில்:மாவட்ட கலெக்டர்…!

16/07/2017 அன்று நடந்த தாமிரபரணி தூய்மை படுத்தும் பணியை துவக்கி வைத்துவிட்டு செல்லாமல் கடைசி வரை இருந்து களப்பணியில் மாணவனோடு மாணவனாய் ஈடுபட்ட நம்ம திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அவர்கள்,இவரை போல ஒரு கலெக்டரை திருநெல்வேலி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.என பொதுமக்கள் மக்கள் மற்றும் மாணவர்கள் மனதார பாராட்டியுள்ளனர். 

பிரித்தானிய கிரான்ட் பிரிக்ஸ்:லூயிஸ் ஹமில்டன் சாம்பியன்…!

பிரித்தானிய கிரான்ட் பிரிக்ஸ் தொடரில், தனது தொடர்ச்சியாக 4ஆவது வெற்றியைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் லூயிஸ் ஹமில்டன், ஒட்டுமொத்த கிரான்ட் பிறிக்ஸ் புள்ளிகளின் பட்டியலில், புள்ளிகளை அதிகரித்துக் கொண்டார். இதனடிப்படையில், முதலிடத்திலுள்ள பெராரியின் செபஸ்டியான் வெட்டலுக்கும் 2ஆம் இடத்திலுள்ள மேர்சிடீஸின் லூயிஸ் ஹமில்டனுக்கும் இடையிலான புள்ளிகளின் வித்தியாசம், 1ஆகக் குறைவடைந்துள்ளது. பல்வேறு அதிர்ச்சியாக சம்பவங்கள் இடம்பெற்ற இந்த ஓட்டத்தில், இறுதி நேரத்தில், வெட்டலின் காரின் டயரில் காற்று இல்லாமல் ஓடியது …..

ஜெயலலிதா மீதான வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று  திமுக எம்.பி. குப்புசாமி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உந்நநிதிமன்றம்  வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில்  விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தன் அடிப்படையில் வழக்கு நடைபெற்றது. ஆனால் … Read more

கியூபாவுடன் : ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்!!

கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் கியூபாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அந்த நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை செயல்படுததுவதற்கா தீர்மானம், பிரான்ஸின் ஸ்டிராஸ்பர்க் நகரிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.இதில், பெரும்பாலான உறுப்பினர்கள் அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அதற்கு ஒப்புதல் அளித்தனர்.‘அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஒப்பந்தம், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்தானது.

ரஷிய அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்!!

ஜெர்மனியில் அடுத்த வாரம் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது என்னென்ன விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி நிரல் தயார் செய்யும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.ரஷியா தவிர, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, சீனா, மெக்ஸிகோ, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தலைவர்களையும் டிரம்ப் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகளின் பொதுவான முக்கிய … Read more

ஊழலில் ஈடுபட்டால் கட்சி பதவி பறிப்பு!!

சோங்கிங் நகரத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் சன் ஷெங்காய். இவர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.இந்த நிலையில், அவரை கட்சியிப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக சென் மைனர் அந்தப் பொறுப்பை ஏற்பார் என்றும் சோங்கிங் மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரம் வாய்ந்த பொலிட்பியூரோ அமைப்பின் 25 உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் சன் … Read more

பலத்த மழை காரணமாக சீனாவில் வெள்ளம்!!

ஆசிய நாடான சீனாவில், ஜிலின் மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜிலின் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன; ஒரு லட்சத்து, 10 ஆயிரம் பேர், வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்தும் முடங்கி உள்ளது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை, 18 பேர் உயிரிழந்து உள்ளனர்; ஏராளமானோர் காணாமல் … Read more

புனிதத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேல் காவலர்கள் பலி

ஜெருசலேமில் புராதன நகரப் பகுதியில் யூதர்களால் மலைக்கோயில் என அழைக்கப்படும் இடத்தில் பைபிள் காலத்திய இரு கோயில்கள் அமைந்துள்ளன. இந்தத் தலம்தான் யூதர்களின் மிகப் புனிதமான தலமாக கருதப்படுகிறது.அதே சமயத்தில், மெக்கா, மதீனாவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் முக்கியத்துவம் அளித்து வரும் அல்-அக்ஸா மசூதியும் அங்கு அமைந்துள்ளது. அந்த இடத்துக்குத் தனிப்பட்ட சொந்தம் கொண்டாடி யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நடைபெறுவது உண்டு. இந்நிலையில், புனிதத் தலம் அருகே பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூவர் இஸ்ரேல் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு … Read more

“டிஐஜி ரூபாவின் இடமாற்றத்திற்கு கிரண்பேடி கண்டனம்”

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறை பெண் டி.ஐ.ஜியாக பதவி வகித்தவர் ரூபா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது என்றும் இதற்காக டி.ஜி.பி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் புகார் தெரிவித்ததோடு அது சம்மந்தப்பட்ட ஆவணங்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார் ரூபா. இந்த விவகாரம் இந்திய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த வாரம் … Read more