அன்பு நிறைந்த இந்தியா.. இதுவே எங்கள் நோக்கம்.! டெல்லியில் ராகுல்காந்தி பேச்சு.!

எந்தவித பாகுபாடும் இல்லாமல் அன்பு நிறைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தின் நோக்கம். – காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி. 

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரை தற்போது 100வது நாளை தாண்டி தலைநகர் டெல்லியில் இன்று துவங்கியுள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்று தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அன்பு நிறைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

மேலும், நாங்கள் அன்பை பரப்பி வருகிறோம். ஆனால் அவர்கள் (பாஜக ஆர்.எஸ்.எஸ்.) நோக்கம் வெறுப்புணர்வை உண்டாக்குவது தான். ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அனைத்து கொள்கைகளுமே மக்களிடையே அச்சத்தை விதைப்பதுதான்.என பாஜகவை விமர்சித்தும் பேசினார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment