#BREAKING: தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. அதன்படி, நாளை தமிழகத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment