அதிமுகவை அசிங்கப்படுத்த வேண்டாம்…. முடங்கும் இரட்டை இலை.? ஓபிஎஸ் புதிய மனு.!

ADMK : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததன் பெயரில் இரட்டை இலை சின்னம் என்பது அவர்களிடத்தில் உள்ளது. இதனை எதிர்த்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

Read More – தேர்தல் பத்திரங்கள் : உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி… சீரியல் நம்பர்களுடன் தாக்கல் செய்த SBI.! 

ஓபிஎஸ் தரப்பு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக , சின்னம் கொடி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என முறையிட்டு இருந்தனர். அதில், தேர்தல் ஆணையம் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

Read More – நீங்கள் முடிவு எடுக்கலனா நாங்கள் எடுக்க நேரிடும்.. ஆளுநர் ரவிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!

இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் தற்போது புதிய மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தேர்தலை சந்தித்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இரட்டை சின்னம் கொண்டு படுதோல்வி அடைவது தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Read More – இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.! 

முன்னதாக, வரும் நாடாளுமன்றத்தில் அதிமுக ஓபிஎஸ்) அணி என்ற பெயரில் பொது சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.