இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தகவல்

20

இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்  என்று  பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ்  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்  என்று  பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ்  தெரிவித்துள்ளார்.