#NZvsAUS : இப்படி ஒரு நிகழ்வு எந்த வீரருக்கும் நடக்காது..! மீண்டும் களத்தில் நீல் வாக்னர் ..!

#NZvsAUS : நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.  அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டிக்கு முன்னர் நியூஸிலாந்து அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான நீல் வாக்னர், சர்வேதச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார்.  இவர் 12 வருட காலமாக நியூஸிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மொத்தம் 64 டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடி, 260 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவர் தற்போது, தனது 37-வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.

Read More :- விடைபெறுகிறேன்.. நன்றி.! கண்கலங்கிய நியூசிலாந்து வீரர்.!

இந்நிலையில், ஆஸ்திரேலியா ,நியூஸிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 69-வது ஓவரின் போது பீல்டிங் செய்வதற்கு நீல் வாக்னர் மாற்று வீரராக களத்தில் இறங்கினார். அவர் உள்ளே வந்து நின்றவுடன் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கை தட்டி அவரை வரவேர்த்தனர்.

Read More :- அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள்… எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

அதன் பின் சில ஓவர்கள் அவர் பீல்டிங் நின்று விட்டு செல்லும் போதும், அவரது ரசிகர்களுக்கு கையெழுத்திட்டு, அவர்களுடன் போட்டோக்களும் எடுத்து கொண்டார். அவர் இந்த தொடரில் இடம் பெறாமல் இருந்தாலும் ஐசிசி அவரை பெருமைப்படுத்தும் விதமாக சிறுது நேரம் களத்தில் நிற்க வைத்துள்ளனர். ஓய்வு அறிவித்த பிறகு இப்படி ஒரு விடைபெறும் (Farewell) நிகழ்வு எந்த வீரருக்கும் அமையாது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment