ஆஸி. பற்றியெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லை ! வெற்றிக்கு பின் ஜோஸ் பட்லர் பேட்டி

ஆஸி. பற்றியெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லை ! வெற்றிக்கு பின் ஜோஸ் பட்லர் பேட்டி

Jos Butler

ஜோஸ் பட்லர்: நேற்று நடைபெற்ற டி20 போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி, ஓமான் அணியை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து, ஓமான் அணியை பேட்டிங் செய்ய முன்மொழிந்தது. அதன்படி ஓமான் அணியும் பேட்டிங் களமிங்கி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 47 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 19 பந்துகளில் போட்டியை முடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியின் ரன் ரேட் உச்சம் பெற்றது. மேலும், கடந்த 2  நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணியின் வேக பந்து வீச்சாளரான ஹசேல்வுட் பேசியபோது இங்கிலாந்து அணியை சூப்பர் 8 சுற்றுக்கு வரவிடாமல் தடுப்பதற்கு ஸ்காட்லாந்து அணியிடம் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவதற்கும் தயாரக இருக்கிறோம்” என்று கூறினார்.

இதற்கு பதில் தரும் விதத்திலும் போட்டியில் வெற்றி பெற்றதை குறித்தும் இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோஸ் பட்லர் போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார். அவர் கூறுகையில், “ஓமான் அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை எங்கள் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றிய போது இந்த போட்டிக்கு நல்ல ஒரு தொடக்கம் அமைந்தது.  எங்கள் பவுலர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.

பிட்சில் பவுன்ஸ் கொஞ்சம் இருந்தது மற்றும் பந்து கொஞ்சம் திரும்பவும் செய்தது. இந்த விக்கெட் இப்படி இருக்கும் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை. இதனை பயன்படுத்தி, ஆதில் ரஷீத் நன்றாக பந்துவீசினார். நாங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுக்கான ஒரு முதல் திட்டமாக இருந்தது. எங்களுடைய ரன் ரேட்டை அதிகரிப்பது சம்பந்தமாக நாங்கள் பேசினோம். எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தான் தெரியும்.

எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து ஆட்டம் பற்றி எல்லாம் யோசிக்க நேரமில்லை. நமது கையில் இருக்கும் போட்டியை வைத்து மட்டும் தான் யோசிக்க முடியும். நமீபியா அணிக்கு எதிராக பெரிய போட்டி இருக்கிறது. எங்கள் கவனம் அந்தப் போட்டியில் மட்டும் தான் இருக்கிறது” என்று கூறினார்.

Join our channel google news Youtube