செல்போனுக்காக கொலை செய்யப்பட்ட வட மாநில தொழிலாளி..! நடந்தது என்ன..?

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா  அருகே நெஞ்சக மருத்துவமனை அருகே புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணியில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பீகாரை சேர்ந்த சுபாஷ் குமார் மற்றும் சுனில் ஆகிய இருவரும் உணவு தயார் செய்வதர்க்காக அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளனர்.

தொடர்மழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி..! மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் 3 பேர் வடமாநில தொழிலாளர்கள் இருவரையும் வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து வடமாநில தொழிலாளர் இருவரும் அவர்களை துரத்தி பிடித்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த மர்மநபர்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களால் வடமாநில தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். இதில் சுபாஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றோருவர் சுனில் பலத்த காயங்களுடன் அந்த இடத்திலேயே மயங்கி கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சுனிலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி  வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.