41 உயிர்களை காத்த `எலி வளை’.. உலகமே திரும்பி பார்க்க வைத்த தமிழக நிறுவனம்!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தது. கடந்த 12-ஆம் தேதி தொழிலாளர்கள் சுரங்கபணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரங்க பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது.

சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு குழாய் வழியாக உணவு, ஆக்சிஜன் வழங்கப்பட்டது. தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், விரைவில் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தோண்டும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

41 தொழிளர்கள் மீட்பு…! அரசியல் தலைவர்கள் பாராட்டு..!

மீட்புப் பணியின் போது ஆகர் இயந்திரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கைகளை கொண்டு துளையிட முடிவு செய்து பணி நடைபெற்று வந்தது. அதன்படி, குழாயில் இருந்து ஆகர் இயந்திரத்தை வெளியே எடுத்த பின் மனிதர்களை அனுப்பி துளையிடும் பணி நடைபெற்றது. இதையடுத்து,  நேற்று இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, எலிவளைச் சுரங்க முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி தொடங்கியது.

எலிவளைச் சுரங்க முறையில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளை கொண்டு சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள். துளையிடும் பணிகள் முழுதாக நிறைவு பெற்று விட்டது. இந்த எலிவளைச் சுரங்க முறை மூலம் ஒரு நபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய அளவுக்கான ஒரு துளையை உருவாக்கி சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் 17 நாள் போராட்டத்துக்குபிறகு நேற்று பத்திரமாக 17மீட்கப்பட்டனர். நொடிக்கு நொடி சவால் பல தடுமாற்றங்களை தாண்டி 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிளான் ஏ சொதப்பிய நிலையில், பிளான் பி வெற்றியை கொடுத்துள்ளது. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, எலி வளை தொழிலாளர்கள், தமிழக நிறுவனத்தை சேர்ந்தார்கள் ஈடுபட்டனர். மீட்கபட்ட தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர் மழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி..! மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

மேலும், 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய 24 “எலி வளை” சுரங்க தொழிலாளர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அமெரிக்க இயந்திரம் 47 மீ துளையிட்ட நிலையில், அசுர வேகத்தில் களமிறங்கிய எலி வளை சுரங்க தொழிலாளர்கள் கை வேலைப்பாடாகவே மீதமுள்ள 13 மீ தொலைவை 21 மணிநேரத்தில் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர்.

வட மாநிலங்களில் சட்டவிரோதமாக எலி வளை சுரங்கங்கள் தோண்டப்பட்டு நிலக்கரி வெட்டப்படுவதை தடுக்க கடந்த 2014ல் எலி வளை சுரங்க நடைமுறைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிர்களை காப்பாற்ற முக்கிய பங்காற்றிய`எலி வளை’ தொழிலாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இதுபோன்று, தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பாறை மற்றும் மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவியது. திருச்செங்கோடு பி.ஆர்.டி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பி.ஆர்.டி.ஜி-5 ரிக் இயந்திரமும் இந்த மீட்புப் பணியில் பங்களித்துள்ளது. மீட்புக்குழு அணுகியதை தொடர்ந்து பி.ஆர்.டி நிறுவனம் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்