குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – புயலாக வலுப்பெற வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – புயலாக வலுப்பெற வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

IMD

வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (29 ஆம் தேதி)  தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் மீது நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30, 2023 அன்று தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube

உங்களுக்காக