போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை – மத்திய அரசு!

போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் திட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் பலனாக தற்பொழுது வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பலர் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசார் நடவடிக்கை உயிரிழக்கவில்லை எனவும், பிற காரணங்களால் தான் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற சலுகைகள் வழங்குவது அந்தந்த மாநில அரசுகளின் முடிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal