‘ தோனிக்கு அடுத்து சிஎஸ்கே கேப்டன் ரோஹித் தான் ‘- அம்பாதி ராயுடு

IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பாதி ராயுடு தற்போது நியூஸ் 24 சேனலில் கலந்துரையாடினார். அவர் அதில் நிறைய ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக வருகிற 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை பற்றி உற்சாகமாக அரட்டை அடித்தார். கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியை சென்னை அணி வென்ற பிறகு சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மனான அம்பாதி ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More :- NZvsAUS : 30 வருடங்களாக சாதனை படைத்து வரும் ஆஸ்திரேலியா ..!

ஐபிஎல் தொடரை பற்றி நியூஸ் 24-யில் அவர் கூறுகையில், ” இந்த ஆண்டு நடைபெற போகும் ஐபிஎல் தொடருக்காக நான் மிகவும் காத்திருக்கிறேன். ஐபிஎல் தொடர்களில் சிறந்து விளங்கும் அணிகளாக மும்பை அணியும், சென்னை அணியும் இருக்கிறது. நான் இரண்டு அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறேன். அதே போல குஜராத் போன்ற ஒரு வலுவான அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை அணியில் மீண்டும் இணைந்துள்ளார். மேலும், அவர் மும்பை அணியை தலைமை தாங்கவும் உள்ளார்.

Read More :- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் கெத்து காட்டும் இந்திய கிரிக்கெட் அணி

குஜராத் அணியை போல  மும்பை அணி இருக்காது. மும்பை அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவது மிகவும் கடினமாக இருக்கும். மும்பை அணிக்காக பாண்டியா இந்த ஒரு வருடம் அணியில் ஒருவராக விளையாடி விட்டு அடுத்த வருடம் கேப்டனாக செயல்படலாம் என்பது எனது கருத்து. ரோஹித் சர்மா போன்ற திறமையான கேப்டன் மும்பை அணிக்கு அமையாது. மேலும், ரோஹித்தை சிஎஸ்கே உடையில் பார்க்க ஆசையாக உள்ளது.

ரோஹித் ஷர்மாவால் இன்னும் 5- 6 ஆண்டுகள் வரை ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். அவர் கேப்டனாக ஆசைபட்டால் ஐபிஎல் அணிகளின் கதவுகள் திறந்தே இருக்கும். ஒரு வேளை சிஎஸ்கே அணியில் தோனி அடுத்த வருடம் (2025) ஓய்வு பெற்றால், ரோஹித் சர்மா சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாட வேண்டும் என்று நான் ஆசை படுகிறேன். தோனிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ரோஹித் தான் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை” , என்று நியூஸ் 24 சேனலில் பேசிய அவர்  கூறி இருந்தார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment