தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க மாட்டோம்..! நாங்கள் முட்டாள் இல்லை.. கர்நாடக துணை முதல்வர் திட்டவட்டம்

DK Sivakumar: பெங்களூருவில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தற்போது தண்ணீர் திறப்பதாக இல்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் புதுச்சேரியில் மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

Read More – நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் கொலை..! சோப்பை விழுங்கி குற்றவாளி தற்கொலை நாடகம்

வழக்கமாக காணொலிக்காட்சி மூலம் நடைபெறும் நிலையில் இம்முறை புதுச்சேரியில் கூட்டம் நடைபெறுகிறது. மார்ச் மாதம் காவிரியில் கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீரின் அளவு குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், இவ்வாறான சூழலில் தான் தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதாக இல்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.

Read More – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் பேங்கிற்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்.!

இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதாக வந்த தகவலில் உண்மையில்லை, பெங்களூருவுக்குத் தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டதே தவிர அண்டை மாநிலத்துக்கு அல்ல. காவிரி நதி நீரை இப்போது தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவதா என்ற கேள்விக்கே இடமில்லை.

Read More – ஒரே ஒரு முறை மணிப்பூருக்கு வாங்க… பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீரர் கண்ணீர் மல்க கோரிக்கை!

தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பது குறித்து கணக்கு இருக்கிறது. இன்று தண்ணீர் திறக்கப்பட்டாலும், அங்கு வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும்,  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இந்த அரசில் நாங்கள் முட்டாள்களாக உட்கார்ந்திருக்க வில்லை” என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment