முஷாரப் இறையான்மைக்கு எதிராக ஒன்றும் செய்ததாக தெரியவில்லை .! பால்வள துறை அமைச்சர் .!

  • சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சில  பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ,”பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப்க்கு கொடுக்கப்பட்ட  தண்டனை மிகவும் கொடுமையானது” என கூறினார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சில  பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது , “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அதிமுக என்கிற இயக்கம் வலுவாக உள்ளது. அதிமுகவை வெல்வதற்கு இனி ஒரு கட்சி பிறந்து தான் வரவேண்டும். அதிமுகவை எதிர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது என கூறினார். குடியுரிமை திருத்த மசோதவிற்கு எதிராக போராடுபவர்களிடம் பீதியைக் கிளப்பி விடுகிறார்கள். ஸ்டாலினைப் பொருத்தவரை மொழிப் பிரச்சனை , இனப்பிரச்சினையை தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது

மேற்கு வங்காளத்தில் உள்ள மம்தா பானர்ஜி அவர்கள்  நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார். இதுபோன்ற முதலமைச்சர் கையில் ஆட்சி இருந்தால் அந்த மாநிலம் கண்டிப்பாக  சுடுகாடாகி விடும் என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் மத்திய மாநில அரசு அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறினார்.

அப்போது  “பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப்க்கு கொடுக்கப்பட்ட  தண்டனை மிகவும் கொடுமையானது. முஷாரப்  பாகிஸ்தான் இறையான்மைக்கு எதிராக ஒன்றும் செய்ததாக தெரியவில்லை” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

author avatar
murugan