"MLA உண்ணாவிரதம்"60,000 பேர் விரட்டியடிப்பு..!!

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., அபிலேஷ் தாகூர், குஜாரத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்த்து அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார்.
குஜாரத்தில் ஏற்பட்ட வன்முறையில், ஒருசிலர் தொழிலாளர்களுக்கு எதிராக பேசியிருக்கலாம். ஆனால் இதை அரசியலாக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று கூறியுள்ளார்.
பீகாரை பூர்வீகமாகக் கொண்ட தொழிலாளி ஒருவர் 14 மாத குழந்தையை பலாத்காரம் செய்ததில், குஜராத் மக்களின் மொத்த கோபமும் பீகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களிலிருந்து வந்து குஜராத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் மீது திரும்பியது. இதனால் 60000 தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்ப்பட்டது.

மேலும் இது குறித்து அவர் பேசுகையில், நான் என்றும் வெறுப்பினை பரப்ப விரும்பியதே இல்லை. எனது சமூகமும் அப்படிப்பட்டது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment