மு.க.ஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்பு!!சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி!!

  • இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். 
  • கலைஞர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் விஜயகாந்த் என்று  மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

பின் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் அதிமுக + பாஜக+ பாமக  உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது.

 

நேற்று  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம்.நாட்டு நலனுக்கேற்ற வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Image result for ஸ்டாலின் விஜயகாந்த்

 

இதேபோல் இன்று இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்.

இதன் பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க மட்டும் தான் வந்தேன். விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர்.அரசியல் குறித்து பேசவரவில்லை.கருணாநிதி மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் விஜயகாந்த்.கருணாநிதி மறைந்தபோது வெளிநாட்டில் இருந்தார் விஜயகாந்த்.அப்போது வீடியோவில் கருணாநிதி மறைவை தாங்க முடியாமல் அவர் அழுத காட்சி இன்றைக்கும் மறக்க முடியாது .நாடு திரும்பியதும் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று அழுதது மறக்க முடியாததுஎன்று  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

Leave a Comment