21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதே நியாயம்-மு.க.ஸ்டாலின் 

  • தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதே நியாயம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 

மக்களவை  இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.

 

  • சோளிங்கர்
  • திருப்போரூர்
  • பெரம்பூர்
  • ஆம்பூர்
  • ஒசூர்
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • திருவாரூர்
  • தஞ்சாவூர்
  • ஆண்டிப்பட்டி
  • சாத்தூர்
  • விளாத்திக்குளம்
  1. பூந்தமல்லி (தனித்தொகுதி)
  2. நிலக்கோட்டை (தனித்தொகுதி)
  3. அரூர் (தனித்தொகுதி)
  4. குடியாத்தம் (தனித்தொகுதி)
  5. பரமக்குடி (தனித்தொகுதி)
  6. மானாமதுரை (தனித்தொகுதி)
  7. பெரியகுளம் (தனித்தொகுதி)

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படவில்லை என கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. இதில் உள்நோக்கம் உள்ளது .21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதே நியாயம் .இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Leave a Comment