மாநகராட்சியின் தீவிர நடவடிக்கை.. சுரங்கபாதையில் மழைநீர் தேங்கவில்லை.! – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.!

மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், தற்போது சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கபட்டுள்ளது. – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் தலைநகர் சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர் பணியாற்றி வருகின்றனர்.  இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் கால அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், தற்போது சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கபட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை வரை மட்டும் சராசரியாக 64.5 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆதலால், மழைநீர் வெளியேற்ற தேவைப்படும் இடங்களுக்கு பம்பு மோட்டார்கள் அனுப்பப்படும் அனுப்படும். எனவும் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment