அதிமுக பொதுகுழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது – ஓபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானது என ஓபிஎஸ் தரப்பு வாதம். 

ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக உறுப்பினர் வைரமுத்து ஆகியோர்  உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில், அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானது.

பொதுக்குழு கூடுவதற்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்கவில்லை. கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருந்த நிலையில் என்னை வேண்டாம் என்று வெளியே தள்ளி முடிவெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment