#Breaking : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை.!

ஓபிஎஸ் மேலுமுறையீடு செய்துள்ள அதிமுக பொதுக்குழு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உத்தரவை பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது.

இந்த மேல்முறையீட்டு விசாரணையினை அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வருவதால் அந்த விடுமுறைகள் கழித்து விசாரணையை தொடங்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறியது.

இதற்கு ஓபிஎஸ் தரப்பு, ‘அதற்குள் இபிஎஸ் தரப்பில் இருந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற பணிகள் நடைபெறுகிறது.’ எனவும், ‘ பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானால் உறுப்பினர்களிடம் 15 நாள் முன்னரே நோட்டீஸ் அனுப்பவேண்டும். அந்த விதிகளை மீறி தான் ஜூலை 11 பொதுக்கூட்டம் நடைபெற்றது’ எனவும் ஒபிஎஸ் தரப்பு வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்று, உயர்நீதிமன்ற நீதிபதிகள், இபிஎஸ் தரப்பிடம், ‘ நீங்கள் தானே இப்போது பொதுச்செயலாளர். பிறகு ஏன் மீண்டும் உடனடியாக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த முயற்சிக்கிறீர்கள். ‘என கேட்டனர்.

மேலும் அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால், வழக்கை நவம்பர் 21 அன்று ஒத்திவைத்தனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் வரையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Leave a Comment