கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய மல்லு சேட்டன்ஸ்.!

சமீபகாலமாக மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும, விமர்சன ரீதியாகவும் ஹிட் கொடுத்து வருகிறது. அதன்படி, மலையாளத்தில் வெளியான பிரேமலு, பிரம்மயுகம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த ஹிட் வரிசையில் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் இணைந்துள்ளது, மஞ்சுமெல் பாய்ஸ் பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

READ MORE – தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை?

அன்றிலிருந்து இப்படம் பற்றிய பேச்சுக்கள் இணையத்தில் அதிகமாக உள்ளது.  படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடைக்கானலுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் கேரளாவின் மஞ்சும்மல்லைச் சேர்ந்த நண்பர்களில் ஒருவர் குணா குகைக்குள் துளைந்துவிட, அவரை தேடும் சர்வைவல் த்ரில்லர் கதையை வைத்து இப்படம் நகர்கிறது.

READ MORE – துணிவு vs வாரிசை தொடர்ந்து மீண்டும் மோதும் அஜித் – விஜய்…களைகட்ட போகும் திரையரங்கம்.!

இந்நிலையில், இப்படம் கேரளாவில் மாபெரும் வரவேற்பை பெற்று உலக முழுவதும் ரூ.25 கோடியை கடந்துள்ளது. இப்போது, தமிழ்நாட்டிலும் இப்படத்தின் மோகம் அதிகரித்துள்ளது, இந்த படத்தை பார்த்துவிட்டு அமைச்சர் உதயநிதி புகழந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு திரையரங்கில் இப்படத்தின் ஷோவை அதிகரிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

READ MORE – வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

இப்படி, மலையாள திரைப்படம் தமிழ்நாடு வரை வெற்றி பெற்ற பெற்றிருந்தாலும், உலக நாயகன் கமல்ஹாசன் அதனை தவிர விட்டார் போல் தெரிகிறது. ஆம், இந்த படத்தில் வரும் குணா குகை காட்சிகளில் நடிகர் கமல்ஹாசன் 1991 ஆம் ஆண்டில் நடித்துவிட்டார். ஆனால், காதல் கதையை மைய்யாக வைத்து எடுக்கப்பட்ட,  இந்த படத்துக்கு அந்த நேரத்தில்  வரவேற்பு கிடைக்கவில்லை. நாளடைவில் தான் இந்த ‘குணா’ படம் குறித்து பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment