தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை?

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் ‘D51’. இந்த திரைப்படம் நடிகர் தனுஷின் 51-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘D51’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார்.

read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்!

படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படம் ஆக்க பட்டு இருந்தது.

அதன்பிறகு, தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் ஒன்றாக நடிக்கவுள்ள காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அவை அனைத்தும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் வரும் காட்சிகள் படம் ஆக்க பட்டு வருகிறதாம். இந்த காட்சிகள் மிகவும் எமோஷனலாக இருக்குமாம்.

read more- நான் ‘அம்மாவாக ஆசை படுகிறேன்’! பொன்னியின் செல்வன் நடிகை ஓபன் டாக்!

எமோஷனலான காட்சி என்றால் தனுஷ் நடிப்பை பற்றி சொல்லியா தெரியவேண்டும்? மிகவும் எமோஷனலாக இருந்ததன் காரணமாக தனுஷும் சரி நாகார்ஜுனாவும் சரி எமோஷனல் காட்சியில் சிறப்பாக நடித்துவிட்டார்களாம். இதனை பார்த்த அங்கிருந்த பிரபலங்கள் மற்றும் தொழிலாளிகள் கண்கலங்கி விட்டார்களாம்.

read more- விண்ணை தாண்டி வருவாயா ‘வாய்ப்பு போச்சு ரொம்ப நொந்துட்டேன்’- ஜனனி வேதனை!

கண்கலங்கி விட்டு ஐயோ தாங்க முடியல என்ன நடிப்பு அவ்வளவு எமோஷனலாக இருக்கிறது என்று தனுஷை பாராட்டி வருகிறார்களாம். படத்தின் படப்பிடிப்பில் இதனை பார்த்தவர்களுக்கு கண்கலங்கி விட்டது என்றால் நிச்சியம் படம் வெளியானால் ரசிகர்களின் நிலைமையே யோசித்து கூட பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் தனுஷ் ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment