#WPL 2024 : முதல் வெற்றியை நோக்கி இரு அணிகள் ..! யாருக்கு அந்த முதல் வெற்றி ..?

பெண்களுக்கான WPL தொடரின் 4-வது போட்டியாக இன்று யூபி வாரியர்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரு அணிகளும் இந்த தொடரில் இது வரை ஒரு வெற்றியை கூட பெற்றதில்லை. அதனால் இரு அணிகளும் தற்போது வெற்றியை பெரும் முனைப்பில் இருந்து வருகிறது.

மேலும், இந்த இரு அணிகளும் WPL  தொடரில் ஒட்டுமொத்தமாக 2 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இந்த 2 முறையும் டெல்லி அணியே வெற்றி பெற்றுள்ளது. WPL தொடரின் வலுவான அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டு யூபி வாரியர்ஸ் அணி வெற்றி பெறுவார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

Read More :- கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் ஹர்திக் பாண்டியா ..!

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடமும், யூபி வாரியர்ஸ் அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணியிடமும் தோற்று இந்த 4-வது போட்டியில் விளையாடவுள்ளனர். எனவே, இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி தங்களது WPL 2024 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

UP வாரியர்ஸ் மகளிர் அணி:

அலிசா ஹீலி ( கேப்டன் / விக்கெட் கீப்பர்), விருந்தா தினேஷ், தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், பூனம் கெம்னர், ராஜேஸ்வரி கயக்வாட், சைமா தாகூர், அஞ்சலி சர்வானி, சா பர்ஷவி யதாப்ராத் டேனியல் வியாட், சொப்பதண்டி யாஷாஸ்ரீ, கௌஹர் சுல்தானா.

Read More :- #INDvsENG : கில்-ஜுரேல் நிதானத்தால் இந்திய அணி வெற்றி ..! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தல் ..!

டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி:

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசானே கப், அனாபெல் சதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, மின்னு மணி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ், டைட்டாஸ் சாது, ஜெஸ் ஜோனாசென், லாரா ஹாரிஸ், அஸ்வனி குமாரி, அபர்ணா மொண்டல், சினேகா தீப்தி.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment