ஆட்டத்திற்கு திரும்பிய கேப்டன் பாண்டியா.! இனிமே அதிரடி தான்!

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டராக இருந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. அடுத்த இந்திய அணியின் கேப்டன் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு அவரது விளையாட்டும், இந்திய அணிக்கு அவர் ஆற்றும் பங்கும் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் போது, அக்டோபர் 19-ம் தேதி அன்று வங்காளதேச அணியுடன் விளையாடும் பொழுது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கிரிக்கெட் விளையாட முடியாமல் அந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார்.

Read More :- #INDvsENG : கில்-ஜுரேல் நிதானத்தால் இந்திய அணி வெற்றி ..! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தல் ..!

அதன் பின் எந்த ஒரு தொடரிலும் இந்திய அணிக்காக பாண்டிய காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது, DY Patil T20 கோப்பை 2024 என்ற தொடரில் ரிலையன்ஸ் 1 (Reliance 1) அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டிய விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியானது ரிலையன்ஸ் அணிக்கும் பிபிசிஎல் (BPCL) இன்று (26-02-2024) காலை 11 மணி அளவில் தொடங்கியது.

Read More :- FIH Pro League 2024 : அயர்லாந்தை 4-0 என்ற கணக்கில் பந்தாடி இந்திய அணி அபார வெற்றி ..!

இந்த போட்டியில் ரிலையன்ஸ் 1 அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், ஹர்திக் பாண்டியா 3 ஓவர் பந்து வீசி 22 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இந்த போட்டியில், அவரது விளையாட்டை பார்க்கும் பொழுது அவர் பழைய நிலைக்கு திரும்பி உள்ளார் என அவரது ரசிகர்களை அவரை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், அந்த ரிலையன்ஸ் 1 அணி இஷான் கிஷன், திலக் வர்மா, நேஹால் வதேரா, சந்தீப் சர்மா மற்றும் பியூஷ் சாவ்லா என்று மினி மும்பை இந்தியன்ஸ் அணியே இடம்பெற்றுள்ளது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment